Advertisement

ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்த போட் நிறுவனம்!

By: Monisha Sat, 22 Aug 2020 6:12:47 PM

ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்த போட் நிறுவனம்!

இந்தியாவின் பிரபல ஆடியோ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான போட் தற்போது ஏர்டோப்ஸ் 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்பட்ஸ் மாடலில் இன்ஸ்டா வேக் என் பேர், ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், மல்டி-பன்ஷன் பட்டன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டோப்ஸ் 131 இயர்பட் ஒவ்வொன்றும் 3.5 கிராம் எடை கொண்டது ஆகும். இவற்றினுள் 13 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என போட் தெரிவித்துள்ளது. இதை கொண்டு ஆடியோ, திரைப்படங்கள் மற்றும் அழைப்புகளில் சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.

true wireless,earbuds,india,boat company,airdops 131 ,ட்ரூ வயர்லெஸ்,இயர்பட்ஸ்,இந்தியா,போட் நிறுவனம்,ஏர்டோப்ஸ் 131

இந்த இயர்பட்களின் சார்ஜிங் கேசை திறந்ததும் இயர்பட்கள் சாதனத்துடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கின்றன. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 650 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய போட் ஏர்டோப்ஸ் 131 ஆக்டிவ் பிளாக், மிட்நைட் புளூ மற்றும் செர்ரி பிளாஸம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
|