Advertisement

மும்பை பங்கு சந்தை இன்று சரிவு

By: vaithegi Mon, 30 Jan 2023 2:33:20 PM

மும்பை பங்கு சந்தை இன்று சரிவு

மும்பை: இன்று சரிவு .... மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 555.15 புள்ளிகள் சரிவடைந்து 58,775.75 புள்ளிகளாக இருந்தது.

இதனை அடுத்து இதில், அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் வர்த்தக தொடக்கத்தில் 10% லாபத்துடன் முன்னணியில் உள்ளன.

மேலும் வர்த்தக தொடக்கத்தில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பைன்செர்வ் போன்றவையும் லாபத்துடன் இருந்தன. டெக் மகிந்திரா, கோபோர்ஜ், எம்பாசிஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். டெக்னாலஜீஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களும் பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்திருந்தன.

mumbai stock exchange,trading ,மும்பை பங்கு சந்தை, வர்த்தகம்

அதைத்தொடர்ந்து பொது துறை வங்கிகள் மற்றும் உலோக துறை ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன. எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்கள் வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தன.

எஸ்.பி.ஐ. லைப், பவர் கிரிட் மற்றும் எச்.யூ.எல். போன்ற நிறுவனங்களும் சரிவை கண்டன. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் வர்த்தக தொடக்கத்தின்போது, 17,500 புள்ளிகளுக்கும் கீழ் சரிவையடைந்து காணப்பட்டது.

Tags :