Advertisement

போல்ட் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

By: Monisha Tue, 30 June 2020 6:31:44 PM

போல்ட் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

இந்திய சந்தையில் போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ (Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. இதில் ஆப்ட்எக்ஸ், ப்ளூடூத் 5.0, ஹை சென்சிட்டிவ் மைக், IPX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி3020 சிப்செட் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. மேலும் இதில் ஆப்ட்எக்ஸ் கோடெக் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப் அல்ட்ரா-லோ லேடென்சி மோட் கொண்டுள்ளது. இதனால் கேமிங்கிற்கு சரியாக இயர்பட்ஸ் ஆக இது இருக்கும்.

india,boult audio,wireless,earbuds,tru5ive pro ,இந்தியா,போல்ட் ஆடியோ,வயர்லெஸ்,இயர்பட்ஸ்,ட்ரூஃவைப் ப்ரோ

இந்த இயர்போன்களில் மென்மையான சிலிகான் இயர்பட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களில் நியோடிமியம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த பேஸ், மற்றும் பேசிவ் பைலேட்டரல் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது.

போல்ட் ஆடியோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 24 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும். இந்தியாவில் போல்ட் ஆடியோ ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் ரூ. 2999 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|