Advertisement

கொரோனா தாக்கத்தினால் வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?

By: Karunakaran Mon, 07 Dec 2020 11:11:29 AM

கொரோனா தாக்கத்தினால் வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா?, வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. கொரோனாவுக்கு முன்பாக வெளிநாட்டு வேலைக்கான உடல்தகுதியாக, மஞ்சள் காய்ச்சல் சோதனை முன்வைக்கப்பட்டது. கொரோனாவிற்கு பின், முழு உடல் பரிசோதனையும், வைரஸ் தாக்குதல் சோதனைகளும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது.

மற்றபடி விசா, தங்குமிடம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது. நாடுகளின் வளத்தை பொறுத்து, வேலைவாய்ப்புகள் மாறுபடும். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மென்பொறியாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் இந்தியர்களுக்கு பிரகாசமாக இருக்கும். எத்தியோப்பியா நாட்டில் கடந்த 65 வருடங்களாக இந்திய பேராசிரியர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

employment,corona impact,job,abroad jobs ,வேலைவாய்ப்பு, கொரோனா தாக்கம், வேலை, வெளிநாட்டில் வேலைகள்

நைஜீரியாவில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த வேலைகளுக்கு இந்தியர்கள் பயன்படுத்தப்படுவர். கென்யாவில் காகித உற்பத்தி, காகித அச்சு போன்ற வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானம் தொடர்பான வேலைவாய்ப்புகளும், தூய்மை பணிகள் சம்பந்தமான வேலைகளும் அதிகமாக இருக்கும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் முடிவெட்டுவதில் தொடங்கி, தூய்மை பணிகள் வரை எல்லாமே இந்தியர்களின் கைவண்ணமாகவே இருக்கும்.

2021-ம் ஆண்டின் பிற்பகுதியில், நிறைய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. கொரோனா அச்சத்தினால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களும், அவர்களோடு புதிய நபர்களும் வெளிநாடு செல்ல அதீத வாய்ப்பிருக்கிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் 50 சதவீத பணியாளர்கள் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டு, வேலைக்கு அழைக்கப்படுவர். தொழிற்பயிற்சிகளுக்கு என்றுமே வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக உற்பத்தி துறை சம்பந்தமான தொழில்பயிற்சிகளுக்கு அதீத வரவேற்பு உண்டு.

Tags :
|