Advertisement

பணம் புழங்குவது குறைந்துவிட்டதால் செல்போன் விற்பனை கடும் சரிவு

By: Monisha Mon, 01 June 2020 6:05:57 PM

பணம் புழங்குவது குறைந்துவிட்டதால் செல்போன் விற்பனை கடும் சரிவு

கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே போன்று செல்போன் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 15 சதவீதம் செல்போன் விற்பனை சரிந்திருப்பதாக தெரிந்துள்ளது. மக்களிடம் பணம் புழங்குவது மிகவும் குறைந்துவிட்டதால் புதிய போன்களை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

cell phone sales,15 percent decline,gst tax,international survey ,செல்போன் விற்பனை,15 சதவீதம் சரிவு,ஜிஎஸ்டி வரி,சர்வதேச ஆய்வு

மேலும் சமீபத்தில் செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. செல்போன் விற்பனை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. சில மாதங்கள் கழித்தே செல்போன் விற்பனை அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.

முன்னதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. பல்வேறு நிறுவன மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஸ்மார்ட்போன்கள் விலையை அதிகரித்து இருக்கிறது.

Tags :