Advertisement

நவீன பின்னலாடை தொழில் நுட்ப கண்காட்சி நிறைவு

By: Nagaraj Tue, 07 June 2022 5:37:14 PM

நவீன பின்னலாடை தொழில் நுட்ப கண்காட்சி நிறைவு

திருப்பூர்: கண்காட்சி நிறைவு... நவீன பின்னலாடை தொழில்நுட்பங்களுடன், ஹைடெக் வளாகத்தில் நடைபெற்றுவந்த 'நிட்டெக்' கண்காட்சி, நேற்று நிறைவடைந்தது.

எத்தகைய நெருக்கடியான சூழலிலும், உலகில் எந்த நாட்டில் அறிமுகமாகும் புதுமையான மெஷின்களை கண்டறிந்து நிறுவி, நாட்டின் பிறஜவுளி நகரங்களுக்கு முன்னோடியாக திருப்பூரை பயணிக்க செய்து வருகின்றனர்.

பின்னலாடை துறையின் நவீன மயமாக்கலுக்கு, உள்ளூரில் நடைபெறும் கண்காட்சிகள்தான் கைகொடுத்து வருகின்றன. கொரோனாவால், கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித கண்காட்சிகளும் நடைபெறாதது தொழில்துறையினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

manufacturing,printing,machines,digital,cov,product ,உற்பத்தி, பிரின்டிங், மெஷின்கள், டிஜிட்டல், கோவை, தயாரிப்பு

இந்நிலையில், 16வது நிட்டெக் கண்காட்சி, பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஹைடெக் வளாகத்தில், 3ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. 275 ஸ்டால்களில், உள்நாடு மற்றும் உலகளாவிய நாடுகளில் தயாரான ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்துவகை அதிநவீன மெஷின்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு, லுாதியானா, மும்பை, டில்லி, கோல்கத்தா என நாடுமுழுவதும் உள்ள ஆடை உற்பத்தி துறையினர் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சியில் இடம்பெற்ற மெஷின்களை பார்வையிட்டு, விவரங்கள் சேகரித்தனர்.

கண்காட்சி குறித்து, ஹைடெக் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராயப்பன் கூறுகையில், ''நான்கு நாட்களில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தி துறையினர், புதிய தொழில்முனைவோர் என, மொத்தம் 24,750 பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மொத்தம், 300 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணைகள் நடந்துள்ளது. ஒரு லட்சம் கோடி வர்த்தகத்தை அடைவதற்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர் என்றார்.

manufacturing,printing,machines,digital,cov,product ,உற்பத்தி, பிரின்டிங், மெஷின்கள், டிஜிட்டல், கோவை, தயாரிப்பு

கண்காட்சியில் அதிவேக உற்பத்தி திறன் மிக்க ஜெர்மனி நாட்டு நிட்டிங் மெஷின், ஜீரோ வேஸ்ட் தொழில்நுட்பத்தில் துணி வீணாகாமல் வெட்டித்தரும் இத்தாலி நாட்டு கட்டிங் மெஷின். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சாயமேற்றும் டையிங் மெஷின்கள்.
ஒற்றை நுாலை பல வித வண்ணமாக மாற்றி ஆடையில் எம்ப்ராய்டரி செய்யும் மெஷின், உலக தரத்துக்கு இணையாக கோவையில் தயாரிக்கப்பட்ட ஸ்கிரீன் பிரின்டிங் மெஷின், வெளிநாட்டு டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்கள் கண்காட்சியில், ஆடை உற்பத்தி துறையினரை அதிகம் கவர்ந்துள்ளன.

Tags :
|