Advertisement

நகைக்கடையில் இன்று அலைமோதும் மக்கள் கூட்டம்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:03:07 PM

நகைக்கடையில் இன்று அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை ... இந்தியாவில் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் போன்றவற்றை பொருத்தே உள்நாட்டில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறதது.

அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 5830 க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.46, 640 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

people,jewelry store ,மக்கள் ,நகைக்கடை

இதையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 5360 க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42880 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வார இறுதி நாட்கள் என்பதால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில் திடீரென தங்கத்தின் விலை குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் கிராமுக்கு ரூ. 76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|