Advertisement

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 27 Mar 2023 10:31:03 PM

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்

விருதுநகர்: இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்... சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:- நாட்டின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில், அர்ஜென்டினா மற்றும் உக்ரைனில் இருந்து சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. மேலும் சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

20 percent,edible oil,hike,import duty ,20 percent, edible oil, hike, import duty, இறக்குமதி வரி, உயர்வு, 20 சதவீதம், சமையல் எண்ணெய்

இந்நிலையில் உலக சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளது. சோயாபீன் எண்ணெய் 31.2 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 32 சதவீதமும், பாமாயில் 5.7 சதவீதமும் குறைந்துள்ளது. அர்ஜென்டினாவில் சோயாபீன் எண்ணெய் விலை 19.5 சதவீதம் குறைந்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எண்ணெய் வித்துக்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால், எண்ணெய் வித்து விவசாயிகள் எண்ணெய் வித்து சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து வருகின்றனர்.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது பரிசீலனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். சமையல் எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எண்ணெய் வித்துக்களின் விலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைந்தபட்சம் 20 சதவீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Tags :
|