Advertisement

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த விவரம்

By: vaithegi Sun, 16 Apr 2023 11:59:14 AM

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த விவரம்

சென்னை: இந்தியாவில் தினசரி பங்கு சந்தை நிலவரத்தை குறித்து தங்கத்தின் விலை கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது உலக அளவில் அதிகரிக்கும் பணவீக்கம் , வட்டி விகிதங்கள் உயர்வு , தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46,000 – ஐ தொடும் நிலைக்கு வந்துள்ளது. அதே போன்று 1 கிராம் 6,0000 நெருங்கி உள்ளது.

இந்த நிலையில் சற்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 560 சரிந்து ரூ.45,200 க்கு விற்கப்பட்டது.

gold and jewelry lovers ,தங்கம் ,நகை பிரியர்கள்

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது ஒரு கிராம் ரூ.5,650-க்கும் ஒரு சவரன் ரூ. 45,200க்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.81.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :