Advertisement

இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய செயலி உருவாக்கம்

By: Karunakaran Wed, 04 Nov 2020 12:57:49 PM

இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய செயலி உருவாக்கம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு, சரியாகி மீண்டும் இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா ஏற்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சோதனையை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் மசாசூட்ஸ் தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மக்கள் இருமலை ஆய்வு செய்து கொரோனா பாதிப்பு உள்ளதா என தெரிவிக்கும் செயலியை உருவாக்கி உள்ளனர். பல்வேறு ஆன்லைன் தகவல்களின் படி, ஆராய்ச்சியாளர்கள் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளனர்.

new processor,diagnosing,corona infection,coughing ,புதிய செயலி, கண்டறிதல், கொரோனா தொற்று, இருமல்

மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை செயலி கண்டறிந்து தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா தொற்று ஏற்பட்ட 70 ஆயிரம் பேரின் இருமல் சத்தங்களை ஆய்வு செய்தனர்.

பின் 2 லட்சம் இருமல் பதிவுகளை ஆய்வு செய்து 2500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இந்த ஆய்வில் செயலி 98.5 சதவீதம் சரியாக முடிவுகளை தெரிவித்து உள்ளது. இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளது நல்ல பாராட்டை பெற்றுள்ளது.

Tags :