Advertisement

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று எவ்வளவு குறைவு தெரியுமா?

By: vaithegi Wed, 22 Mar 2023 11:57:40 AM

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று எவ்வளவு குறைவு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து, புதிய புதிய உச்சத்தை தொட்டு ரூ.45 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை.

இந்த நிலையில், இன்று நகைப்பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக தங்கத்தின் விலையானது என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக சவரனுக்கு ரூ.800 என குறைந்துள்ளது.அதன்படி, நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.44, 560 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையி

gold,comedians ,தங்கம் ,நகைப்பிரியர்கள்

தற்போது ரூ.800 குறைந்து சவரன் ரூ.43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5570க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளதை தொடர்ந்து, ரூ.5470க்கு விற்பனையாகிறது.

இதே போன்று சென்னையில் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.700 என அதிரடி சரிவை கண்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கும், அத்துடன் கிலோவுக்கு ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|