Advertisement

இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

By: vaithegi Wed, 19 Apr 2023 1:03:53 PM

இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?


சென்னை: இந்தியாவில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தற்போது உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்து கொண்டு வருகின்றனர்.

மேலும் அத்துடன் தங்கத்தின் மீதான முதலீடும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதன் காரணமாக தங்கத்தின் விலையானது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற 22 -ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பர். இந்த வேளையில் தமிழகத்தில் தங்கத்தின் விலையானது இன்று திடீரென அதிகரித்துள்ளது.

sawaran,aksaya trithi,price of gold ,சவரன் ,அட்சய திருதி,தங்கத்தின் விலை

அதாவது இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 45 320 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ.5,665 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ. 81 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000 க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :