Advertisement

இன்றைக்கு ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

By: vaithegi Fri, 05 May 2023 12:52:12 PM

இன்றைக்கு ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அடுத்த 2நாட்களில் குறைந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாகவே மீண்டும் அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அதன் படி நேற்று முன் தினம் சவரனுக்கு 728 ரூபாய் அதிகரித்த நிலையில், நேற்று 352 ரூபாய் உயர்ந்தது. இதேபோல் நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து 1 கிராம் 5,750 க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.46,000ஐ தொட்டு புதிய உச்சத்தை எட்டியது.

sawaran,the price of gold ,சவரன் ,தங்கத்தின் விலை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 90 காசுகள் அதிகரித்து 83.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :