Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • எந்த லிங்க்-கையும் கிளிக் செய்யாதீர்கள்... ஏமாற்றுகிறார்கள்; வருமானவரித்துறை எச்சரிக்கை

எந்த லிங்க்-கையும் கிளிக் செய்யாதீர்கள்... ஏமாற்றுகிறார்கள்; வருமானவரித்துறை எச்சரிக்கை

By: Nagaraj Thu, 07 May 2020 9:04:39 PM

எந்த லிங்க்-கையும் கிளிக் செய்யாதீர்கள்... ஏமாற்றுகிறார்கள்; வருமானவரித்துறை எச்சரிக்கை

புதுடில்லி: ஜாக்கிரதையாக இருங்க... வருமானவரி துறை கட்டிய வரி பணத்தை திரும்ப அளிப்பதாக லிங்க் வந்தால் க்ளிக் செய்ய வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களால் வருமானம் ஈட்ட முடியாததை கருத்தில் கொண்டு அரசு கடன் உள்ளிட்ட சிலவற்றிற்கு கால நீட்டிப்பு அளித்துள்ளது.

general news,rbi news,corona news,department of income tax,government loan ,பொது செய்திகள், ரிசர்வ் வங்கி செய்திகள், கொரோனா செய்திகள், வருமான வரித் துறை, அரசு கடன்

இந்நிலையில் வருமாவரி துறை வரி கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதாக போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் உலாவ தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வருமானவரி துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து தெரிவித்துள்ளதாவது:

“வருமான வரி தொகையை திரும்ப அளிப்பதாக ஷேர் ஆகும் எந்த லிங்க்குகளையும் வரி செலுத்துவோர் க்ளிக் செய்ய வேண்டாம். அவையெல்லாம் பொய்யானவை. அவ்வாறு எந்த சலுகையையும் வருமானவரி துறை அளிக்கவில்லை. இதுகுறித்து வரும் இமெயில் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மோசடி செயலாக இருக்கலாம்.

எனவே மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு, ரகசிய எண் உள்ளிட்டவற்றை யாருடனும் பகிர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளனர். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Tags :