- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை மீண்டும் அதிகாரிப்பு
தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை மீண்டும் அதிகாரிப்பு
By: vaithegi Wed, 29 Nov 2023 12:00:26 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கிலோ ரூ. 200 – ஐ தாண்டியது.இதையடுத்து அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதன் பிறகு தக்காளியின் விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு படிப்படியாக விலை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கன முதல் மிக கனமழை பெய்து கொண்டு வருகிறது.
எனவே இதன் காரணமாக தக்காளியின் கிலோ விலை ரூ. 50 – ஐ தொட்டுள்ளது. தற்போதைய சூழலில் தக்காளியின் விலை முன்பை போல மீண்டும் கிலோ ரூ. 200 தொடும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.