Advertisement

கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரிப்பு

By: vaithegi Thu, 16 Nov 2023 2:59:58 PM

கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரிப்பு

சென்னை: காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை உயர்ந்த படியே இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியலை இங்கே காணலாம். அவரைக்காய் கிலோ ரூ. 40-க்கும், நெல்லிக்கனி ரூ. 102க்கும், மக்காச்சோளம் ரூ. 80க்கும், பீன்ஸ் ரூ. 60க்கும், பீட்ரூட் ரூ. 35க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 13-க்கும், குடைமிளகாய் ரூ. 40-க்கும், கேரட் ரூ. 35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

price,sale,market of vegetables ,காய்கறிகளின் விலை ,விற்பனை ,சந்தை

இதனையடுத்து, காலிபிளவர் ரூ. 20க்கும், கொத்தவரைக்காய் ரூ. 40 க்கும், தேங்காய் ரூ. 30-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 25க்கும், முருங்கைக்காய் ரூ.60க்கும், பூண்டு ரூ. 180 க்கும், இஞ்சி ரூ. 240க்கும், கோவைக்காய் ரூ. 25 க்கும், வெண்டைக்காய் ரூ. 35க்கும், மாங்காய் ரூ. 80க்கும்,

மேலும் மரவள்ளி ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 56க்கும், சாம்பார் வெங்காயம் ரூ. 90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கனமழை தொடர்ந்தால் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|
|