Advertisement

வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ரூ. 10க்கு விற்பனை

By: vaithegi Sat, 02 Sept 2023 1:22:34 PM

வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ரூ. 10க்கு விற்பனை


சென்னை: தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தக்காளியின் விளைச்சல் பாதிப்படைந்து அதன் விலை பல மடங்கு அதிகரித்தது.

இதையடுத்து 1 கிலோ தக்காளி விலை ₹200 வரை விற்கப்பட்டதால் நடுத்தர மக்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்தனர். எனவே இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலைகளில் தக்காளி கிலோ ரூபாய் 60க்கு விற்பனை செய்து வந்தது.

tomato,sale ,தக்காளி ,விற்பனை

இச்சூழலில் கடந்த இரண்டு வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தக்காளி கிலோ 25க்கும், இரண்டாம் தரம் தக்காளிய ரூபாய் 10க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நவீன் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|