Advertisement

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

By: vaithegi Tue, 09 May 2023 10:01:18 AM

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

நாமக்கல் : முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.45 காசுகளிலிருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ. 4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 1 -ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.05 ஆக இருந்தது. படிப்படியாக அதிகரித்து தற்போது முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக உயர்ந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை உயர்ந்துள்ளது.

eggs,farm purchase price ,முட்டை , பண்ணைக் கொள்முதல் விலை

ஆனால் அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.

எனவே இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|