Advertisement

விலை குறைவில் மின்சார வாகனங்கள்... இந்திய சந்தையை கலக்க ரெடி

By: Nagaraj Sun, 16 Apr 2023 11:29:13 PM

விலை குறைவில் மின்சார வாகனங்கள்... இந்திய சந்தையை கலக்க ரெடி

புதுடில்லி: விலை குறைவில் மின்சார வாகனங்கள்... இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை ஈடு செய்யும் வகையில், ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் வருகை அதிகமாக உள்ளது.

அந்த வரிசையில், இந்திய சந்தையில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் 69,000 விலையில் கிடைக்கிறது என்பது இன்ப அதிர்ச்சி. இப்போது அந்த ஸ்கூட்டர்களின் மாடல், நிறுவனம் மற்றும் வசதிகளை பார்ப்போம்.


எலெஸ்கோ நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை வி1 மற்றும் வி2 எனப் பெயரிடப்பட்டுள்ளன. எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும். இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய 6-7 மணி நேரம் ஆகும்.

cell phone,electric,price,scooter , எலக்ட்ரிக், செல்போன், விலை, ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டர் தினசரி வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் ஏற்றது. மாலை மற்றும் இரவில் சார்ஜ் செய்தால், காலையில் வழக்கமான வேலைக்கு பயன்படுத்தலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 200 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டவை. மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

புளூடூத் இணைப்பு, ஜிபிஎஸ், சைட் ஸ்டாண்ட் சென்சார், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கீலெஸ் இக்னிஷன் ஆகியவை சிறப்பம்சங்கள். மேற்கண்ட அனைத்து வசதிகளும் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை வெறும் ரூ.69,999. இது எக்ஸ்-ஷோரூம் விலை.

இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ஆப்பிள் ஐபோன் 14ஐ விட குறைவு. ஏனென்றால் ஆப்பிள் ஐபோன் 14 செல்போனின் விலை ரூ.79,900. எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய இரண்டு புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகக் குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எலெஸ்கோ நம்புகிறது.

Tags :
|