Advertisement

கடந்த நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

By: Nagaraj Sat, 13 May 2023 4:38:31 PM

கடந்த நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

துபாய்: லாபம் ஈட்டியது... கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர்.

income,emirates,flight,staff,bonus,notice ,வருமானம், எமிரேட்ஸ், விமானம், ஊழியர்கள், போனஸ், அறிவிப்பு

இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போனஸாக வழங்க உள்ளது.

இத்தகவல் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags :
|
|
|
|