Advertisement

பண்டிகை தினம் முடிவடைந்த பிறகும் காய்கறிகளின் விலை சற்றும் குறையவில்லை

By: vaithegi Wed, 25 Oct 2023 3:54:23 PM

பண்டிகை தினம் முடிவடைந்த பிறகும் காய்கறிகளின் விலை சற்றும் குறையவில்லை

சென்னை: இன்றைய காய்கறிகளின் விலை .. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, தற்போது பண்டிகை தினங்கள் அனைத்து முடிவடைந்திருக்க காய்கறிகளின் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியலை காணலாம்.

price of vegetables,festival ,காய்கறிகளின் விலை,பண்டிகை


முதலாவதாக, அவரைக்காய் கிலோ ரூ.60க்கும், மக்காச்சோளம் ரூ.85க்கும், பீன்ஸ் ரூ. 80க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 30-க்கும், முட்டைக்கோஸ் ரூ.12க்கும், குடைமிளகாய் ரூ.50க்கும், கேரட் ரூ. 30-க்கும், காலிஃப்ளவர் ரூ.25க்கும், கொத்தவரை ரூ. 25க்கும், தேங்காய் ரூ.26க்கும், வெள்ளரிக்காய் ரூ. 20க்கும், முருங்கைக்காய் ரூ. 65க்கும்,

மேலும் பூண்டு ரூ. 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பெரிய வெங்காயம் ரூ.44 க்கும், சின்ன வெங்காயம் ரூ.90 க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30-க்கும், முள்ளங்கி ரூ. 40-க்கும், சேப்பங்கிழங்கு ரூ. 50க்கும், சுரைக்காய் ரூ. 20க்கும், தக்காளி ரூ. 22க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும், பூசணிக்காய் ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :