Advertisement

இன்றும் குறைந்தது ஆபரண தங்கம்

By: vaithegi Fri, 22 Sept 2023 12:06:05 PM

இன்றும் குறைந்தது ஆபரண தங்கம்


சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்தது.
கிராமுக்கு ரூபாய் 20 குறைந்த நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,530 ஆக விற்பனையானது. அதேபோன்று 1 சவரன் தங்கத்தின் விலை ஆனது 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது.

jewelery gold,sale ,ஆபரண தங்கம் ,விற்பனை

இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 1 கிராம் ரூ. 5,510 ஆக விற்பனையாகிறது.

இதனை அடுத்து அதன்படி சவரனுக்கு ரூ. 160 குறைந்து 1 சவரன் ரூ.44,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று 1 கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :