Advertisement

இன்றும் ஆபரண தங்கத்தின் விலை குறைவு

By: vaithegi Thu, 20 Oct 2022 2:31:16 PM

இன்றும்  ஆபரண தங்கத்தின் விலை குறைவு

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4685 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 37480 என விற்பனையாகி வருகிறது.சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5111 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40888 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 61 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61000 எனவும் விற்பனையாகி வருகிறது.

Tags :