Advertisement

சரியும் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ 2000 சரிவு..

By: Monisha Thu, 14 July 2022 8:08:57 PM

சரியும் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ 2000 சரிவு..

தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம், உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம், மத்திய அரசின் தங்க இறக்குமதி மீதான வரி உள்ளிட்டவை முக்கிய காரணமாக உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.46,900 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.50,160 ஆகவும் உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் இதே விலையில் தான் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இந்த மூன்று நகரங்களிலும் ஒரே விலையாக இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 57,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று சென்னையில், 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து, ரூ. 4,660 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.37,280 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold,price,falling,drop ,தங்கம், வெள்ளி,விலை,சரிவு,

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.16 அதிகரித்து, ரூ. 4,676 ஆகவும், சவரனுக்கு ரூ. 128 அதிகரித்து, ரூ.37, 408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில். இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.62.30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.62, 300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|