Advertisement

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

By: Nagaraj Wed, 02 Sept 2020 09:31:09 AM

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.7 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 × 2520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765 5ஜி 7 என்எம் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் அட்ரினோ 620 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

motorola,48 mb primary,sensor,5 mb macro ,மோட்டோரோலா, 48எம்பி பிரைமரி, சென்சார், 5எம்பி மேக்ரோ

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16எம்பி மெயின் கேமரா, 8எம்பி வைடு லென்ஸ் இரண்டு செல்பீ கேமராக்களைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனஸ், கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Tags :
|