Advertisement

விரைவில் வெளியாக உள்ள மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:16:09 AM

விரைவில் வெளியாக உள்ள மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது. இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600×720 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

moto e7 plus,smartphone,qualcomm,snapdragon,processor feature ,
மோட்டோ இ7 பிளஸ், ஸ்மார்ட்போன், குவால்காம், ஸ்னாப்டிராகன், பிராசஸர் வசதி

கேமரா அளவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

Tags :