Advertisement

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது!

By: Monisha Tue, 06 Oct 2020 6:36:33 PM

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது!

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

சிறப்பு விற்பனைக்கென ப்ளிப்கார்ட் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில், இரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

flipkart,big billion days sale,state bank of india,paytm,offer ,ப்ளிப்கார்ட் நிறுவனம்,பிக் பில்லியன் டேஸ் சேல்,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேடிஎம்,சலுகை

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டுகளுக்கு மாத தவணை வசதி மற்றும் ப்ளிப்கார்ட் பே லேட்டர் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் மொபைல், டிவி, வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள், அக்சஸரீக்கள் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

சிறப்பு விற்பனையின் போது எல்ஜி ஜி8எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,990, போக்கோ எம்2 ப்ரோ மாடல் ரூ. 12,999, மோட்டோ ஒன் பியூஷன் பிளஸ் ரூ. 15,999, சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ரூ. 13,999 என தள்ளுபடி செய்யப்பட்ட சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Tags :
|