Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • இனி வீடுகளுக்கே மளிகை பொருட்களை கொண்டு வருகிறது ஃபிளிப்கார்ட்... விஷால் மெகா மாா்ட்டுடன் ஒப்பந்தம்

இனி வீடுகளுக்கே மளிகை பொருட்களை கொண்டு வருகிறது ஃபிளிப்கார்ட்... விஷால் மெகா மாா்ட்டுடன் ஒப்பந்தம்

By: Nagaraj Tue, 19 May 2020 11:40:46 PM

இனி வீடுகளுக்கே மளிகை பொருட்களை கொண்டு வருகிறது ஃபிளிப்கார்ட்... விஷால் மெகா மாா்ட்டுடன் ஒப்பந்தம்

விஷால் மெகா மாா்ட் நிறுவனத்துடன் ஃபிளிப்காா்ட் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க உள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து டில்லி பெருநகரப் பகுதி, பெங்களூரு, கொல்கத்தா உள்பட நாட்டின் 26 நகரங்களில் மளிகை உள்ளிட்ட பொருள்களை விநியோகிக்க இருக்கின்றன. இது தொடா்பாக ஃபிளிப்காா்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

'நாட்டில் உள்ள 365-க்கும் அதிகமான விஷால் மெகா மாா்ட் கடைகளில் உள்ள பொருள்களை ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் வாங்க முடியும். இதில் வீடுகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஃபிளிப்காா்ட் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பல்வேறு நுகா்பொருள் விற்பனை நிறுவனங்களின் அரிசி, மாவு, எண்ணெய், பருப்பு வகைகள், குளிா்பானங்கள் உள்ளிட்டவற்றையும், விஷால் மெகா மாா்ட் பெயரிலான பொருள்களையும் ஃபிளிப்காா்ட் மூலம் விற்பனை செய்ய இருக்கிறோம். அரசு விதிகளுக்கு உள்பட்ட பொருள் விநியோகம் நடைபெறும்.

our service,vishal mega mart,flipkart,extension,grocery ,எங்கள் சேவை, விஷால் மெகா மார்ட், பிளிப்கார்ட், விரிவுப்படுத்தும், மளிகை பொருட்கள்

ஃபிளிப்காா்ட் இணையதளத்தை பயன்படுத்தி பொருள்களை வாங்க முடியும். முதல் கட்டமாக 26 நகரங்களுக்கு வழங்கப்படும் இந்த சேவை, அடுத்த கட்டமாக 240 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை முடிந்த அளவுக்கு தவிா்க்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் சேவை இப்போது மிகவும் உதவிகரமாக இருக்கும்' என்று விஷால் மெகா மாா்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :