Advertisement

300 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதே விலையில் விற்பனை

By: vaithegi Fri, 17 Mar 2023 12:25:59 PM

300 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதே விலையில் விற்பனை

சென்னை : நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையானது சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் படி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்நடைமுறை பல காலமாக இருந்து வரும் நிலையில் நாட்டில் இந்நடைமுறைக்கு எதிர்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை ரூ. 100யை கடந்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் 1லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ;பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

ஆனால் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக பெட்ரோல் இருப்பதால் அவர்கள் எவ்வளவு விலை இருந்தாலும் வாங்க வேண்டிய நிலைமை இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைய மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. எனவே படி மத்திய அரசு 2 முறை கலால் வரியில் ஒரு பகுதியை ரூ. 9, டீசல் விலையில் ரூ. 7.50 என குறைத்தது, ஆனாலும் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மேலும் 300 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை அடுத்து இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் விலை எப்போது குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Tags :
|