Advertisement

கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Fri, 28 Aug 2020 5:43:59 PM

கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் , பெசல் லெஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே மற்றும் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

samsung,galaxy z fold 2,5g,smartphone ,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி இசட் ஃபோல்டு 2,5ஜி,ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனின் உள்புறம் பன்ச் ஹோல் கேமராவும், கவர் டிஸ்ப்ளேவில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

Tags :
|