Advertisement

எப்ஃப்பிஓ வாபஸ் பெற்றது குறித்து கவுதம் அதானி விளக்கம்

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:25:18 AM

எப்ஃப்பிஓ வாபஸ் பெற்றது குறித்து கவுதம் அதானி விளக்கம்

புதுடெல்லி: எப்.ஃப்பிஓ வாபஸ் எதற்கு... முதலீட்டாளர்களின் நலன் முக்கியம் என்பதால் பங்கு விற்பனையை எஃப்பிஓ வாபஸ் பெற்றதாக கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

பங்குச் சந்தையில் அறிவிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஃபாலோ-ஆன் பப்ளிக் ஆஃபரை (எஃப்பிஓ) திரும்பப் பெறுவதாகவும், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் எஃப்.பி.ஓ.வை தொடர்வது நல்லதல்ல என இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

adani group,fpo,new delhi, ,அதானி குழுமம், எஃப்பிஓ, புதுடெல்லி

மேலும் ஒரு தொழிலதிபராக தனது 40 வருட பயணத்தில், தனக்கு எப்போதும் தனது பங்குதாரர்களின் ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றிருப்பதாகவும், அவர்களின் நலன் தனக்கு மிக முக்கியமானது என்றும் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் என்றும் அதானி குறிப்பிட்டார்.

அவர் தனது வாழ்நாளில் ஒரு சிறிய அளவிலாவது சாதித்திருந்தால் அதற்கு முதலீட்டாளர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம் என்றார்.

எஃப்பிஓ தொடர்பான இந்த முடிவு தங்களின் தற்போதைய வணிகத்தையோ அல்லது திட்டங்களையோ பாதிக்காது என்றும், நிறுவனத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது என்றும் அதானி கூறியுள்ளார்.

Tags :
|