Advertisement

தங்கம் ,வெள்ளி விலை மீண்டும் சரிந்துள்ளது

By: vaithegi Mon, 21 Nov 2022 10:28:06 AM

தங்கம் ,வெள்ளி விலை மீண்டும் சரிந்துள்ளது

சென்னை: மீண்டும் சரிவு .... தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்,

இதனை அடுத்து இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூபாய் 4920.00 என விற்பனையாகிறது.

gold,silver ,தங்கம் ,வெள்ளி

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 சரிந்து ரூபாய் 39360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5322.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42576.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

அதேபோன்று சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் சரிந்து ரூபாய் 66.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Tags :
|