Advertisement

உச்சத்தில் இருக்கும் தங்கம்

By: vaithegi Sun, 29 Oct 2023 11:25:41 AM

உச்சத்தில் இருக்கும் தங்கம்

சென்னை: இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை ..இந்தியாவில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை முடிவடைந்த பிறகும் கூட தங்கத்தின் விலை அதி வேகத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6240க்கும், சவரனுக்கு ரூ.49,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5770க்கும், சவரனுக்கு ரூ.46,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

இதனைத்தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதேபோல, நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 77.50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|