Advertisement

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம்

By: vaithegi Fri, 24 Mar 2023 11:30:24 AM

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம்

சென்னை: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நடுத்தர வர்கத்தினரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருப்பதுபோன்று தோன்றினாலும், அதன் விலை ஏறுமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 360 ஆக இருந்தது. இந்த விலை தான் இதுவரை இல்லாத அளவான அதிகபட்ச தங்கத்தின் விலையாக பார்க்கப்பட்டது. இந்த சாதனையை முறியடித்து கடந்த 18-ம் தேதி தங்கம் விலை 44 ஆயிரத்தை கடந்தது.

gold,zsavaran ,தங்கம் ,zசவரன்

தொடர்ந்து 20ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,580க்கும், ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்பனையாகி புதிய வரலாற்று சாதனையை படைத்தது. அதன்பிறகு மறுநாளே சவரனுக்கு ரூ. 800 குறைந்து இல்லத்தரசிகளை ஆறுதல் படுத்தியது. அதற்குள்ளாக நேற்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,540க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து 1 சவரன் ரூ.44,320க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்து சவரன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனையாகிறது. அதேபோன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.75.70-க்கும், ஒரு கிலோ ரூ. 75 ஆயிரத்து 700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|