Advertisement

தொடர்ந்து உச்சம் தொட்டும் தங்கம்

By: vaithegi Fri, 27 Oct 2023 10:46:26 AM

தொடர்ந்து உச்சம் தொட்டும் தங்கம்

சென்னை: கடந்த 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம், 10 நாட்களில் ரூ.1,160 உயர்வு ...தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. கிராம் ஒன்றிற்கு ரூ. 20 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 5,655க்கும் , ஒரு சவரன் 45,240க்கும் விற்பனையானது. இதனிடையே நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold,women,sales ,தங்கம் ,பெண்கள் ,விற்பனை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Tags :
|
|