Advertisement

தொடர் சரிவில் தங்கம்

By: vaithegi Wed, 15 Feb 2023 11:23:58 AM

தொடர் சரிவில் தங்கம்

சென்னை: இந்தியாவில் குறிப்பாக சொல்லப்போனால் தமிழ்நாட்டில் தங்கம் ஒரு ஆபரண பொருளாக மட்டுமில்லாமல் ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதற்கு ஏற்றார் போல் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மக்கள் பலரும் கொரோனா காலத்திற்கு பிறகு தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5315.00 என விற்பனையாகிறது. அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 42520.00 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5677.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூபாய் 72.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Tags :
|