Advertisement

இன்று மீண்டும் குறைந்தது தங்கம்

By: vaithegi Fri, 13 Oct 2023 12:00:26 PM

இன்று மீண்டும் குறைந்தது தங்கம்

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,280க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து 1 சவரன் ரூ.42,976 ஆகவும், கிராமுக்கு ரூ.8 குறைந்து 1 கிராம் ரூ.5,372 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 1 சவரன் 43,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து 1 கிராம் ரூ.5, 410 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம்,விற்பனை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்தது. அதன்பதி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

மேலும் சென்னையில் 1 கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|