Advertisement

ஒரே நாளில் அதிக விலை உயர்வை அடைந்த தங்கம்

By: vaithegi Wed, 21 Dec 2022 2:42:36 PM

ஒரே நாளில் அதிக விலை உயர்வை அடைந்த தங்கம்

சென்னை: சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது ... ஆபரணத் தங்கத்தின் விலை பலமுறை ஏற்ற இறக்கங்களை அடையும் போதிலும், சராசரியை விட பல மடங்கு அதிக விலை உயர்வை அடையும் சமயம் ஒட்டு மொத்த சந்தை விற்பனையாளர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது.

அந்தவகையில் இன்றைய விலை நிலவரம் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் மாத தொடக்கம் முதல் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5,000 ஐ தாண்டி தான் உள்ளது. ஆனால் நேற்றைய விலையை விட இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.50 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்தும் உள்ளது.

gold,chennai ,தங்கம் ,சென்னை

இதனை அடுத்து இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக விலை உயர்வை தங்கம் அடைந்துள்ளது. எனவே அதன்படி, இன்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5115 க்கும், 1 சவரன் ரூ.40920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 5517 க்கும், 1 சரவன் ரூ. 44136 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை எப்போதும் 10, 20 பைசா என்ற வகையில் கிராமிற்கு உயரும், ஆனால் நேற்றை விட இன்று 1 கிராம் வெள்ளி ரூ.2.20 பைசா உயர்ந்தும், 1 கிலோ ரூ.2020 அதிகரித்து ரூ.74700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|