Advertisement

நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு

By: vaithegi Sat, 07 Jan 2023 3:11:41 PM

நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு

சென்னை: இன்று மீண்டும் உயர்வு ... தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் ரூ.41 ஆயிரத்தை தொட்டது. எனவே அதன்படி ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்து, தற்போது ரூ.42 ஆயிரத்தை தங்கம் விலை தொட உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து விலை அதிகரித்துகொண்டே வருவது நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை நேற்று அதிரடி சரிவை கண்டது. அந்த வகையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையானது. ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.

gold,chennai,silver ,தங்கம் ,சென்னை,வெள்ளி

இதையடுத்து அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 31 உயர்ந்து ரூ.5,221க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலையும் அதிரடியாக 90 காசுகள் அதிகரித்துள்ளது.

எனவே அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|