Advertisement

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை

By: vaithegi Thu, 17 Nov 2022 3:53:33 PM

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்தாலும் மக்களுக்கு தங்கம் மீது உள்ள மோகம் குறையாமல் இருக்கிறது. ஒரு விசேஷம் என்றாலே அதில் தங்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையடுத்து இந்த நிலையில் தங்கம் விலையில் நேற்று எதிர்பாராத ஏற்றம் காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதனால் மக்கள் சற்று நிம்மதியாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய (நவ. 17) நிலவரப்படி தங்கம் விலை குறித்து பார்க்கலாம்.

gold,chennai ,தங்கம் ,சென்னை

அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அது மட்டுமில்லாமல் 24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ. 5000யை கடந்து ரூ5352க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|