Advertisement

தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 16 Mar 2023 12:05:54 PM

தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் தற்போது தங்கத்தின் மீதான முதலீடு உயர்ந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்ல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. இத்தகைய காரணத்தால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் அடைந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 360 உயர்ந்துள்ளது.நேற்றைய தினம் தங்கம் விலை சற்று சரிந்தது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில் ஆனால் மீண்டும் அதிகரித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

the price of gold,comedians ,தங்கத்தின் விலை,நகைப்பிரியர்கள்

அந்த வகையில் இன்று (மார்ச் 16) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.360 அதிகரித்து ரூ 43,400க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது. மேலும் 1 கிராம் தங்கம் ரூ. 45 அதிகரித்து ரூ 5,425க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 44,000 – ஐ நெருங்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70க்கு விற்கப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி ரூ.72,700 க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :