Advertisement

தங்கம் விலை இன்று சவரனுக்கு இவ்வளவு குறைந்துள்ளது

By: vaithegi Thu, 03 Nov 2022 2:23:18 PM

தங்கம் விலை இன்று சவரனுக்கு இவ்வளவு குறைந்துள்ளது

சென்னை: தங்க நகையை ஆபரணமாக மட்டும் பார்க்காமல் அதனை ஒரு சிறந்த முதலீட்டாக பார்க்கின்றனர். அதனால் அதன் விலையில் எந்தவித மாற்றம் இருந்தாலும், நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. அதன் பின் சற்று தங்கம் விலை அதிகரித்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எதிர்பாராத சரிவை கண்டுள்ளது.

gold,chennai ,தங்கம் ,சென்னை

இதனை அடுத்து இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்துள்ளது. எனவே அதன் படி இன்று (நவ. 3) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4715 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 5117 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் ரூ. 40936க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 64000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|