Advertisement

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

By: vaithegi Mon, 08 May 2023 11:36:38 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை என்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 664 அதிரடியாக குறைந்தது.

அதன்படி 1 கிராம் ஆபரணத் தங்கம் கிராம் 5,692 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 45,536 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி அதே விளையில் விற்பனையானது.

gold price,chennai ,தங்கம் விலை ,சென்னை

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. எனவே அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.45,680க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் கிராமுக்கு ரூ.19 அதிகரித்து 1கிராம் ரூ. 5,710க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் 30 காசுகள் உயர்ந்து, 1 கிராம் வெள்ளி 82 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700க்கு விற்கப்படுகிறது.

Tags :