Advertisement

தொடர் சரிவில் தங்கத்தின் விலை

By: vaithegi Wed, 08 Nov 2023 10:58:56 AM

தொடர் சரிவில் தங்கத்தின் விலை

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையானது கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனையானது.

gold price,sale ,தங்கத்தின் விலை ,விற்பனை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5660-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிகிறது. கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து ரூ.77,500-க்கு விற்பனையாகிறது.

Tags :