Advertisement

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை

By: vaithegi Sat, 11 Nov 2023 4:38:05 PM

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை


சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1 சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45,160-க்கு விற்பனையாகிறது. அதேபோல் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,645-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தில் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,800-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.ரூ.5,600-க்கும் விற்பனையாகிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

இதனை அடுத்து வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.76-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தீபாவளி விற்பனை தொடங்கியதிலிருந்து தற்போது வரை தங்கம், வெள்ளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும், தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்து 41 டன் தங்கம், 40 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாகவும் வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :