Advertisement

இன்றும் தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை

By: vaithegi Tue, 16 May 2023 1:38:55 PM

இன்றும்  தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை

சென்னை: தமிழக மக்களுக்கு விசேஷம் என்றாலே நியாபகத்திற்கு வருவது தங்கம் தான். எவ்வளவு தான் தங்கம் விலை ஏற்றம் அடைந்தாலும் மக்கள் அதை விரும்பி வாங்க தான் செய்கிறார்கள். மேலும் தங்கம் என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் நல்ல ஒரு முதலீட்டாக இருப்பதால் அதில் பணத்தை செலவு செய்ய மக்கள் தயக்கம் காட்டாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தங்கம் விலையானது கடந்த வாரம் உச்சம் பெற்ற நிலையில் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் நிலையாக இருக்கிறது.

sales,gold price ,விற்பனை,  தங்கம் விலை

அதனால் நகை வாங்க நினைப்பர்வர்களுக்கு இதுவே நல்ல சமயமாக இருக்கிறது. இதையடுத்து அந்த வகையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் 5,715 ரூபாய்க்கும், 1 சவரன் ரூ. 45,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6184க்கும் 1 சவரன் ரூ. 49472க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.78.80க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.78,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|