Advertisement

தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5000யை நெருங்க இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி

By: vaithegi Wed, 16 Nov 2022 12:25:46 PM

தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5000யை நெருங்க இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: இன்றைய தங்கம் விலை ... தமிழக மக்கள் மத்தியில் தங்க நகைகளுக்கு என்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. மேலும் தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும் அதை மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை அடுத்து இந்த நிலையில் தங்கம் விலையானது கடந்த மாதம் குறைந்து இருந்தது. அதனால் மக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். ஆனால் இந்த மாதம் தங்கம் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது.

public,gold price ,பொதுமக்கள் ,தங்கம் விலை ஒ

அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 4960க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 160 உயர்ந்து, ரூ.39680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ 5362க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 42896க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையானது கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூ. 67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 67500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|