Advertisement

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

By: vaithegi Sun, 15 Oct 2023 10:39:40 AM

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

சென்னை: 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 உயர்வு ... சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு விலை சிறிது சிறிதாக குறைந்து வந்தது.

rise,bounce ,உயர்வு ,பவுன்


இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென அதிரடியாக அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,555-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கும் விற்பனையானது. எனவே இதன்மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது. இதேபோன்று, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுன் ரூ.48,200-க்கு விற்பனையானது.

Tags :
|