Advertisement

தங்கம் ... இன்றைய விலை நிலவரம்

By: vaithegi Mon, 19 Dec 2022 3:28:13 PM

தங்கம்     ...   இன்றைய விலை நிலவரம்

சென்னை: இன்று சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ... ஆபரணத் தங்கம் என்பது தமிழக மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. அனைத்து வித சுப காரியங்களிலும் தங்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மக்கள் அன்றாட தங்க விலை நிலவரத்தை கவனித்து கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பானது தான். ஆனால் சமீப காலமாக மிகவும் உச்சகட்ட விலை ஏற்றத்தை தங்கம் அடைந்து வருகிறது.இந்த அதீத விலை உயர்வினால் நடுத்தர மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.

gold is expensive ,தங்கம்     ,அதீத விலை

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 1 கிராம் ரூ.5,056ஆகவும், சவரன், ரூ.40,448ஆகவும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் திங்கட்கிழமையான இன்றைய காலை சந்தை நிலவரப்படி தங்கம் கிராமிற்கு ரூ.14 உயர்ந்துள்ளது.

இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.ரூ.5,070 ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.40560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5472 ஆகவும், 1 சவரன் ரூ.43776 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராம் ஒன்றிற்கு 10 பைசா அதிகரித்து ரூ.73.10 ஆகவும், 1 கிலோ ரூ.73,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :