Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்வு

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்வு

By: vaithegi Wed, 05 July 2023 11:34:03 AM

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்வு

சென்னை: தங்கம் விலை எவ்வளவு உச்சம் தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒரு நாள் உயர்வாகவும், ஒரு நாள் குறைவாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தொடர்ந்து ஏற்ற இறங்களுடனேயே தங்கம் விற்பனையாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த வாரங்களில் தொடர் சரிவில் இருந்துவந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை ரூ.46,000ஐ தொட்டது. பின்னர் ஒருநாள் உயர்வதும், ஒருநாள் குறைவதுமாக இருந்து வந்தது. அந்தவகையில் கடந்த இரு வாரங்களில் கனிசமாக குறைந்து தற்போது சவரன் ரூ.44 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகிறது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

இந்த நிலையில் நேற்று முதல் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதாவது நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிரடியாக அதிகரித்து, 1 சவரன் ரூ.43,616க்கும், கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,452க்கும் விற்கப்பட்டது.

இதையடுத்து இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமு 64 ரூபாய் அதிகரித்து 1 சவரன் ரூ.43,680க்கும், கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து கிராம் ரூ.5,460க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.75.80 காசுகளுக்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ. 75,800க்கு விற்கப்படுகிறது.

Tags :